இலையுதிர்
காலம்
இலையுதிர்
காலம்
இலையுதிர் காலம், வசந்தத்திற்கு முகமன்
கூறும் காலம். பெரும்பாலான மரங்கள் பழைய சொக்காய்களைக்கழற்றிப்போட்டு விட்டு, புதுச்சொக்காய்களைப்போர்த்திக்கொள்ளும்
காலத்தின் அரிகுறி. நம் தலையிலிருந்தும் அவ்வப்போது முடி கொட்டுகிறது. காலனி வாசிகள்
இலையுதிர்க்கும் மரங்களைப்பார்த்து முகம் சுழிப்பது அழகல்ல. வாழ்நாளில் நீங்கள் எத்தனை
குப்பை போடுகிறீர்கள்! மரம் உதிர்க்கும் இலைகள் மண்ணுக்கு உரம். நீங்கள் போடும் பிளாஸ்டிக்
உட்பட அனைத்தும் மண்ணுக்கு உரமாகுமா? மாசி மாதம் இலையுதிர்காலம். தை என்றால் தரையும்
நடுங்கும். குளிர் விடும் காலம் மாசி மாதம். மாசிக்கடைசியில் தளிர்கள் விட, வசந்த காலம்
ஆரம்பம். ஆம்! பங்குனி காலம் தான் நமக்கு வசந்த காலம். ஆனால் மரங்களை வெட்டித்தள்ளி
விட்டபடியால், அது வெய்யில் கொழுத்தும் கோடை காலம் ஆகிப்போயிற்று. மாசி, பங்குனி, சித்திரை,
வைகாசி என்னவானதென்றால், வெய்யில், மிக வெய்யில், உக்கரமான வெய்யில் என வெப்பகாலமாகிப்போனது.
நீர் நிலைகள் அழிக்கப்பட்டு பஸ்
ஸ்டேண்ட் முதற்கொண்டு கோர்ட் வரை அரசே உதாரணகர்த்தாவாகிப்போய் குளிர்ச்சி குறைய நாமெல்லாம்
அக்னி குண்டத்துக்குள் இருப்பது போல பூமியில் வாழ்கிறோம். போதாக்குறைக்கு குளிர் சாதனப்பெட்டி
மாட்டி வெளியில் வெப்பத்தை மிகைப்படுத்துகிறோம். மரங்களும், நீர் நிலைகளும் இல்லாமல்
போய்,ஜனப்பெருக்கத்தின் சூடு, RCC கட்டிடங்களின் சூடு, வாகனப்பெருக்கம் என ஆகிப்போய்
பருவத்திற்கு மழையில்லை. பருவ மழை அற்றுப்போய் விட்டதற்குக்காரணம் மனிதன். கடவுள் மனிதனை
ஏன் படைத்தார்?எந்த உயிரும் இயற்கையை மனிதனைப்போல நாசம் செய்வதில்லை. அதுஅதன் நிலையில்
உள. மனிதன் கையில் குரங்கு கையில் பூமாலை போல இந்த பூமி அகப்பட்டு, சீரழிந்து கொண்டிருக்கிறது.
வெறித்தனமாக பணத்தைக்குவிக்க பூமியைக்கூறு போட்டு விற்கிறான். பூமியை துளைத்தெடுக்கிறான்,
மணலை அள்ளுகிறான். நீரை மாசு படுத்துகிறான். காற்றை மாசு படுத்துகிறான். குப்பைகளை
டன் கணக்கில் விசிறி விடுகிறான். எந்த விலங்கும் தேவைக்கு மேல் பூமியைச் சுரண்டுவதில்லை.
இந்த வருஷம் 1 அல்லது 2 டிகிரி
வெப்பம் கூடும் என அறிவிப்பு. அது நிகழ்கிறது. பருவ மழையைத்தொலைத்து விட்டு, எப்போவாது
புயல் வரின் மழை வருகிறது. நீருக்கு விலை நிர்ணயித்துவிட்டோம். காற்றுக்கு? எப்போது
திருந்தப்போகிறோம். மழையைத்தொலைத்தது போல வசந்தகாலத்தை எப்போதோ தொலைத்து விட்டோம்.
மாசி கடைசி, பங்குனி மாதங்கள் வசந்தமாக இருந்தது, கோடை காலமாகிப்போனது நமது முட்டாள்
தனமான வாழ் முறையால் தான் எனச்சொன்னால் அது மிகையல்ல.